×

சென்னையில் 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்ததார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததார். சென்னையில் 679 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகளவில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற 6 வார முகாம்களில் 13,374 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாம்கள் மூலம் பயனடைந்துள்ளனர்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பேசியதாவது; மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தோம். மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை எனவும் கூறினார். எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு வீடியோவாக வெளியிடுகிறார்கள். இயல்பை விடவும் அதிகமான மழை பெய்து இருப்பதாக வானிலை மையமே அறிவித்துள்ளது. சென்னை வடிகால் பணிகளுக்காக ரூ.4000 கோடி செலவு செய்தது எப்படி எனவும் விவாதிக்க தயார் எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மழை, புயல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்ததார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,MLA ,Rainy Special Medical Camp ,Chennai ,Subramanian ,
× RELATED தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும்,...